South Indian Inscriptions XXIII, No. 353

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 353." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_353

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 353
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_353
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 356 of 1907,
Abstract
The details of the date are given as Kumbha, ba. 1. Monday, Anusham but are irregular.This registers a sale of land which was tank-irrigated and which measured 2 mā, 3 kāṇi and odd in extent for 800 kāśu to the temple of Tiruviśālūr-Uḍaiyār by Amudāḍṇāḷ-Sāni, wife of Gōmaḍattu Yajñamapināyaka-Bhaṭṭa of Kiḻānaḍichchēri a quarter of Vēmbaṛṛūr , with her son Śrirāma-Bhaṭṭa acting on her behalf as mudukṇa (guardian). The land is said to have formed part of a bigger plot presented by her husband to her and to her son (another) Mahādēva-Bhaṭṭa, the latter of whom had previously sold his share to the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 :-திரிபுவனச்சக்கரவத்தி மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு பதின்ஏழாவது கும்𑌭நாயற்று அபரபக்ஷத்து 𑌪𑍍𑌰தமையும் தி[ங்கள்]-
க்கிழமை[யும்*] பெற்ற அனிழத்துநாள் உடையார் இராஜராஜி𑌶𑍍𑌵ரமுடை யார் தேவதானம் விருதராயபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டு வேம்பற்றூரான எதிரிலிசோ[ழ]ச்சருப்பேதிமங்கலத்து [கி]ழாநடிச்சேரி கோ-
மடத்து யஞ்ஞமணிநாயகபட்டன் பிராமணி அமுதாண்டாள் சாணியென் என் [மகன்] சிராமபட்டனை முதுகண்ணாக கொண்டு விற்றுக்குடுத்த நிலமாவது இந்நாட்டு உடையார் திருவிசலூருடையார் [கோயில்] முலரத்தி ஆதிசண்டே𑌶𑍍𑌵-
ரதேவர் திருவருளால் இக்கோயில் ஸ்ரீகாரியம் செய்வாருக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்க்கும் தேவகன்மி கோயிற்கணக்கர்[க்*]கும் இற்றைநாளால் விற்றுக்குடுத்த குளப்புன்செ[ய்*] நிலமாவது இவ்வூர் முதற்க[ட்டில்] இராசரா-
சவதிக்கு கிழக்கு கேரளாந்தகவாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று நாலாஞ்சதிரத்து நான் என் [ப]த்தாவின் பக்கல் பிருதிதானத் தால் பெற்றுடையேநாய் என்னுதாயிருந்தும் என் மகன் மாதேவபட்ட னுதாயிருந்து-
ம் இப்படியால் எங்களுதாயிருந்த ஊர்ப்படிக் குளப்புன்சை நிலமும்மா வரை அரைக்காணி முக்கால் முந்திரிகையுங் கிழ்மாகாணிக்கும் கிழ்பாற் கெல்லை பிறந்தூர் திருவரங்கதேவப[ட்]ட ஆதித்தியார் மக-
ன் ஆரா[வ]முதுபட்டன் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கண்ணாற்றுக்கு வடக்கும் மேல்பால்கெல்லை கழனிவாயிலுடையான் விளை நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மதிஆலை ஆற்றுக்குத் தெற்க்கும்
ஆக இசைத்த பெருநான்கெல்லைஉள் நடுவுபட்ட உள்பட்ட நில மும்மா வரை அரைக்காணி முக்கால் முந்திரிகையின்கீழ் மாகாணி இதில் இம்மாதேவ பட்டனுக்கு நிலங்கலந்தவாற்றால் கூறாய் இந்நாயனார்க்கு இவன் முன்
னாளில் நீர்வார்த்து குடுத்த நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகை நீக்கி என்னுதான நிலம் இரண்டு மா முக்காணி சின்னம்மும் விற்று குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு எண்[ணூறும்] ஆவ-
ணக்களியே காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விற்றுக்குடுத்தேன் இக்கோயில் ஸ்ரீகாரியம் செய்வார்[க்*]கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற்கணக்கனுக்கும் இவமுதாண்டாள் சானியெ...
......க்கு இதுவே [வி*]லையாவதாகவும் இதுவே பொரு[ள் ]மாவறுதி பொருள் செலவோலை ஆவதாகவும் இது அல்லது வேறுபொ[ருள்] மாவறுதிபொருள் சில ஓலை காட்டக்கடவதல்லா[த*]தாகவும் இந்நிலத்துக்கு இவர்கள் வேண் டின பெ...[விளையாலண]-
[ம்] பண்ணிகுடுக்ககடவேனாகவும் குடுத்திலேநாகில் இந்த இசைவுதிட்டே பிரமாணம் ஆவதாகவும் இப்படி இசைந்து விலைக்குற விற்று பொருளறக் கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவு திட்டுக் குடுத்தேன் உடையார் திருவிசலூரு-
டையார் கோயிலில் சிகாரியஞ்செய்வார்க்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰க்கண்காணிசெய் வார்களுக்கும் தேவகன்மி கோயிற்கணக்கர்க்கும் இக்கோமடத்து எச்ச மணி நாதப[ட்*]டன் பிராமணி என்மகன் சிராமபட்டனை மு[து]..........
முதாண்டாள் சானியென் இவர்கள் அர்த்திக்க நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு எழுதிநேன் [இரு]ங்கண்டி சிரிளங்கோபட்டன் மகன் சிராமபட்ட [னேன் இ]வை என் எழுத்து இப்படி இசைந்து என் மாதாவுக்கு முது...... காசு எண்ணூறும்
க்கு குடுத்து இக்குளப்புஞ்சை நிலம் இரண்டுமா முக்காணிச் சின்னமும் .................[ ை ]மக்கு கோமடத்து சிராமசன்மநென் இவை என் எழுத்து இப்படி அறிவேன் இராயூர் தேவபட்டநேன்......மாங்களூர் திருச்சி-
ற்றம்பலநம்பியேன் இப்படி அறிவேன் வேம்பற்றூருடையான் ஆண்டபிள்ளை ஆனந்த[கூத்தந்]...பட்டநேன் இப்படி அறிவேன் முப்பிரால் நாராயண பட்டநேன் இப்படி அறிவேன் குண்டூர் கொவிந்தபட்டநென்.. னவங்கிபுறத்து 𑌦𑌕𑍍𑌷𑌿 [ணா]-
முத்திபட்டநேன் இப்படி அறிவேன் ஆலங்குடையா[ன்*] அருளாழி அச்சுதநேன் இப்படி அறிவேன் பிருந்தூர் திருவரங்கப்பட்ட[சோமாசி] யார் மகன் ஆராஅமுதுபட்ட நென்-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀- திரிபுவனச்சக்கரவத்தி மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு பதின்ஏழாவது கும்𑌭நாயற்று அபரபக்ஷத்து 𑌪𑍍𑌰தமையும் திங்கள்-
க்கிழமையும் பெற்ற அனிழத்துநாள் உடையார் இராஜராஜி𑌶𑍍𑌵ரமுடை யார் தேவதானம் விருதராயபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டு வேம்பற்றூரான எதிரிலிசோழச்சருப்பேதிமங்கலத்து கிழாநடிச்சேரி கோ-
மடத்து யஞ்ஞமணிநாயகபட்டன் பிராமணி அமுதாண்டாள் சாணியென் என் மகன் சிராமபட்டனை முதுகண்ணாக கொண்டு விற்றுக்குடுத்த நிலமாவது இந்நாட்டு உடையார் திருவிசலூருடையார் கோயில் முலரத்தி ஆதிசண்டே𑌶𑍍𑌵-
ரதேவர் திருவருளால் இக்கோயில் ஸ்ரீகாரியம் செய்வாருக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்க்கும் தேவகன்மி கோயிற்கணக்கர்க்கும் இற்றைநாளால் விற்றுக்குடுத்த குளப்புன்செய் நிலமாவது இவ்வூர் முதற்கட்டில் இராசரா-
சவதிக்கு கிழக்கு கேரளாந்தகவாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று நாலாஞ்சதிரத்து நான் என் பத்தாவின் பக்கல் பிருதிதானத் தால் பெற்றுடையேநாய் என்னுதாயிருந்தும் என் மகன் மாதேவபட்ட னுதாயிருந்து-
ம் இப்படியால் எங்களுதாயிருந்த ஊர்ப்படிக் குளப்புன்சை நிலமும்மா வரை அரைக்காணி முக்கால் முந்திரிகையுங் கிழ்மாகாணிக்கும் கிழ்பாற் கெல்லை பிறந்தூர் திருவரங்கதேவபட்ட ஆதித்தியார் மக-
ன் ஆராவமுதுபட்டன் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கண்ணாற்றுக்கு வடக்கும் மேல்பால்கெல்லை கழனிவாயிலுடையான் விளை நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மதிஆலை ஆற்றுக்குத் தெற்க்கும்
ஆக இசைத்த பெருநான்கெல்லைஉள் நடுவுபட்ட உள்பட்ட நில மும்மா வரை அரைக்காணி முக்கால் முந்திரிகையின்கீழ் மாகாணி இதில் இம்மாதேவ பட்டனுக்கு நிலங்கலந்தவாற்றால் கூறாய் இந்நாயனார்க்கு இவன் முன்
னாளில் நீர்வார்த்து குடுத்த நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகை நீக்கி என்னுதான நிலம் இரண்டு மா முக்காணி சின்னம்மும் விற்று குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு எண்ணூறும் ஆவ-
ணக்களியே காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விற்றுக்குடுத்தேன் இக்கோயில் ஸ்ரீகாரியம் செய்வார்க்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற்கணக்கனுக்கும் இவமுதாண்டாள் சானியெ . . .
. . . . . . க்கு இதுவே விலையாவதாகவும் இதுவே பொருள்மாவறுதி பொருள் செலவோலை ஆவதாகவும் இது அல்லது வேறுபொருள் மாவறுதிபொருள் சில ஓலை காட்டக்கடவதல்லாத தாகவும் இந்நிலத்துக்கு இவர்கள் வேண் டின பெ . . . விளையாலண-
ம் பண்ணிகுடுக்ககடவேனாகவும் குடுத்திலேநாகில் இந்த இசைவுதிட்டே பிரமாணம் ஆவதாகவும் இப்படி இசைந்து விலைக்குற விற்று பொருளறக் கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவு திட்டுக் குடுத்தேன் உடையார் திருவிசலூரு-
டையார் கோயிலில் சிகாரியஞ்செய்வார்க்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵𑌰க்கண்காணிசெய் வார்களுக்கும் தேவகன்மி கோயிற்கணக்கர்க்கும் இக்கோமடத்து எச்ச மணி நாதபட்டன் பிராமணி என்மகன் சிராமபட்டனை முது . . . . . . . . . .
முதாண்டாள் சானியென் இவர்கள் அர்த்திக்க நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு எழுதிநேன் இருங்கண்டி சிரிளங்கோபட்டன் மகன் சிராமபட்ட னேன் இவை என் எழுத்து இப்படி இசைந்து என் மாதாவுக்கு முது . . . . . . காசு எண்ணூறும்
க்கு குடுத்து இக்குளப்புஞ்சை நிலம் இரண்டுமா முக்காணிச் சின்னமும் . . . . . . . . . . . . . . . . . மைக்கு கோமடத்து சிராமசன்மநென் இவை என் எழுத்து இப்படி அறிவேன் இராயூர் தேவபட்டநேன் . . . . . . மாங்களூர் திருச்சி-
ற்றம்பலநம்பியேன் இப்படி அறிவேன் வேம்பற்றூருடையான் ஆண்டபிள்ளை ஆனந்தகூத்தந் . . . பட்டநேன் இப்படி அறிவேன் முப்பிரால் நாராயண பட்டநேன் இப்படி அறிவேன் குண்டூர் கொவிந்தபட்டநென் . . னவங்கிபுறத்து 𑌦𑌕𑍍𑌷𑌿 ணா-
முத்திபட்டநேன் இப்படி அறிவேன் ஆலங்குடையான் அருளாழி அச்சுதநேன் இப்படி அறிவேன் பிருந்தூர் திருவரங்கப்பட்டசோமாசி யார் மகன் ஆராஅமுதுபட்ட நென்-
Took Place At
Śivayōganātha temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
125
Date Created
1193
Name
Kulōttuṅga-Chōḻa (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed