Inscription of the Pudukkottai State_459
Item Details
- Identifier
- IPS_459
- Bibliographic Citation
- Inscriptions of the Pudukottai State, R. Kannan, Commissioner of Archaeology and Museums, 1929.
- Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Grantha
Tamil - Description (plain Text)
-
1. ஸ்வஸ்திஸ்ரீ [கோச்சடை]யபன்மரான திரிபுவனச்ச[க்]கரவர்த்திகள் ஸ்ரீ பிராக்கிறமபாண்டிய ஆண்டு ரு ஆ-
2. வதி[ன்] எதிர் [எ ஆவது] கும்[ஹ]நாயற்று அபரபக்ஷத்து துவாதேசியும் நாயாற்றுக்கிழமையும் பெற்ற உத்திராடத்-
3. து நாள் கா[ன]னாடான விருதராசபயங்கரவாளநாட்டு மெலூர் சிராளதேவன் முனையதரையன் ம….. னா…
4. ன் எந்மகன் சிராளதேவர்க்கு நான் குடுத்த காணியாட்சியுமனையும் அடிமையு[ம் பி]ரமாணம் பண்ணிகுடுத்த
5. பரிசாவது இவர்க்கு நான் குடுத்த காணியாட்சியாவது மெலூர் குளத்தில் அனைத்துமடையால் நீர்பா-
6. ய்ந்து விளையும் பற்றில் எங்கள் பிதாக்கள் முனையதரையர் உடைய நாயனாற்க்கு[க்கு]டுத்த காணியாட்சியில் த[டி]
7. பற்றிற்கு இந்த உடையநாயனாற்கு தேவிமங்கலத்தில் [வய]லில்... தில் நிலத்துக்கு [தலை]மா.. சீராளதேவர்ப்-
8. பற்றான மெலூர் வயலில் சிறுனங்கள் வயக்கல் நான்கெல்லைக்கு[ள்] பட்ட [தடி] முற்றுநிலம் இந்நில.
9. வரும் [அருவி] நிலங்களும் காணியாட்சி விழுக்காட்டில் [குடு]த்த உள்ளூர் நாயனார் தேவதானம் பெரிய தேவ[தா]னம் த-
10. டி முற்று நிலமும் நாயனார் திருமெய்ய மலையாளன் தி[ருவிடையாட்ட]……... தா….. [லி]ல்….
11. இ[க்]காணியில் குடுத்த பன்னிரடிக்கோலால் மூன்றுத[ர]த்தி……... கு [த]-
12. டி மாற்றுக்கு விட்ட நிலமூன்றுமா நிக்கி நிலம் பதினெழுமா[வும்] ஆ……..
13. ம் என் விழுக்காடு மனையிற்குடுத்த மெலூ[ர்] நடுவில் தெருவி[ல் தென்சிறுகில் நா]ன்கெல்லைக்குள்ப்பட்ட மனையும் புழக்க[டை]-
14. யும் தேவிமங்கலத்தில் என் விழுக்காடு மனையில் குடுத்த மனை ஒணும் புழக்கடையும் ஆக இந்த காணியாட்சியுமனையும் இவை-
15. யிற்றில் மேல்நோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறுகளும் புன்செயும் நத்தமும் நத்தப்பாலும் இந்நிலங்களுக்கு-
16. ரித்தான குளங்களில் நிரும் பாசியும் மற்றும் எப்பேற்பட்ட சமத்த.. த்திகளும் பற்றி அனுபவித்து பொதுவாராகவும்
17. இந்த மெலூர் தெவிமங்கலத்தில் நான் எழுதிக்குடுத்த காணியாட்சியிலுமனையிலும் உயர்ப்பன உயற்றியும்
18. குழிப்பன குழித்தும் வைப்பன வைத்தும் இந்நிலங்களில் கடமை.. நிலத்துக்கு ஊறி[ஞ்ச] பரியாதி கடமை யிறுத்தும் ப-
19. ல தேவதானம் திருவுடையாட்டப்பற்றுக்கு இறுப்பன இறுத்தும் பெறுவன பெற்றும் அனுபவித்து பொதுவாராகவும்
20.[இ]வை... [டி] இம்மரியாதி அனுபவித்து நாம் எழுதிக்குடுத்த அடிமையார தே..[வி]யும் இவள் மகள் சிராளும் இவள் தம்பி மக்கணாயனு-
21. ம் இவளுடைய சிறியதாய் ஆவுடையாளும் இவள் தம்பி சிராரதே[வ]னும் இவன் மருமகள் சிராளும் பெரியனாச்சி மகன் திருமெய்யம-
22. லையாளனும் [சிவ]த்தமக்கணாயனும் ஆகப்பேர் எட்டும் பள்ளடியாரில் வளத்[தி] மகள் மன்றியும் இவள் மகள் பொன்னியும் கொள்-
23. ளி மகள் தொழு[தி]யும் உடப்பி மகன் பொன்னனும் விளத்தி மகன் வில்லியும் ஆக இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சி-
24. யும் மனையுமற்றும் எப்பேற்பட்ட சமுத்த ப்ராத்திகளும் தரனாதன கங்களுக்குரித்தாவதாக சந்திராதித்தவற் செல்ல அனுபவிக்கு-
25. ம்படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக்குடுத்தேன் சிராளதேவர்க்கு முனையதரையன் மக்க.. யனா ..இப்படிக்கு இவை
26. மெலூர் சிராளதேவன் முனையதரையன் மக்கணாயனார் எழுத்து இவை முனையதரையன் எழுத்து இ[வை]…. ன[னா]….
27. ரான வல்லநாட்டு வேளாண் எழுத்து இப்படிக்கு கோட்டையூர் உலகளந்தசோழக்கானனாட்டு வேளார் எழுத்து இப்படிக்கு
28. செங்குன்றநாட்டு வேளார் எழுத்து இவை வாணாதராயர் எழுத்து இவை கண்ணனுர் சுந்தர... காலிங்கராயர் எ-
29. ழுத்து இப்படிக்கு தெர்க்கட்டுர் வாணாதராயர் எழுத்து இப்படிக்கு இவை அழகிய திருச்சிற்றம்பலமு-
30. டையார் ஆனையார் எழுத்து இவர்கள் சொல்ல இந்த ப்ரமாணம் எழுதினேன் மெலூர் ஊர்க்கணக்கு உலகல-
31. ங்கார முவேந்திர வேளான் எழுத்து - Transcription
-
1. svastiśrī [kōccaṭai]yapaṉmarāṉa tiripuvaṉacca[k]karavarttikaḷ śrī pirākkiṟamapāṇṭiya āṇṭu ru ā-
2. vati[ṉ] etir [e āvatu] kum[ha]nāyaṟṟu aparapakṣattu tuvātēciyum nāyāṟṟukkiḻamaiyum peṟṟa uttirāṭat-
3. tu nāḷ kā[ṉa]ṉāṭāṉa virutarācapayaṅkaravāḷanāṭṭu melūr cirāḷatēvaṉ muṉaiyataraiyaṉ ma….. ṉā…
4. ṉ enmakaṉ cirāḷatēvarkku nāṉ kuṭutta kāṇiyāṭciyumaṉaiyum aṭimaiyu[m pi]ramāṇam paṇṇikuṭutta
5. paricāvatu ivarkku nāṉ kuṭutta kāṇiyāṭciyāvatu melūr kuḷattil aṉaittumaṭaiyāl nīrpā-
6. yntu viḷaiyum paṟṟil eṅkaḷ pitākkaḷ muṉaiyataraiyar uṭaiya nāyaṉāṟkku[kku]ṭutta kāṇiyāṭciyil ta[ṭi]
7. paṟṟiṟku inta uṭaiyanāyaṉāṟku tēvimaṅkalattil [vaya]lil... til nilattukku [talai]mā.. cīrāḷatēvarp-
8. paṟṟāṉa melūr vayalil ciṟuṉaṅkaḷ vayakkal nāṉkellaikku[ḷ] paṭṭa [taṭi] muṟṟunilam innila.
9. varum [aruvi] nilaṅkaḷum kāṇiyāṭci viḻukkāṭṭil [kuṭu]tta uḷḷūr nāyaṉār tēvatāṉam periya tēva[tā]ṉam ta-
10. ṭi muṟṟu nilamum nāyaṉār tirumeyya malaiyāḷaṉ ti[ruviṭaiyāṭṭa]……... tā….. [li]l….
11. i[k]kāṇiyil kuṭutta paṉṉiraṭikkōlāl mūṉṟuta[ra]tti……... ku [ta]-
12. ṭi māṟṟukku viṭṭa nilamūṉṟumā nikki nilam patiṉeḻumā[vum] ā……..
13. m eṉ viḻukkāṭu maṉaiyiṟkuṭutta melū[r] naṭuvil teruvi[l teṉciṟukil nā]ṉkellaikkuḷppaṭṭa maṉaiyum puḻakka[ṭai]-
14. yum tēvimaṅkalattil eṉ viḻukkāṭu maṉaiyil kuṭutta maṉai oṇum puḻakkaṭaiyum āka inta kāṇiyāṭciyumaṉaiyum ivai-
15. yiṟṟil mēlnōkkiṉa maramum kīḻnōkkiṉa kiṇaṟukaḷum puṉceyum nattamum nattappālum innilaṅkaḷukku-
16. rittāṉa kuḷaṅkaḷil nirum pāciyum maṟṟum eppēṟpaṭṭa camatta.. ttikaḷum paṟṟi aṉupavittu potuvārākavum
17. inta melūr tevimaṅkalattil nāṉ eḻutikkuṭutta kāṇiyāṭciyilumaṉaiyilum uyarppaṉa uyaṟṟiyum
18. kuḻippaṉa kuḻittum vaippaṉa vaittum innilaṅkaḷil kaṭamai.. nilattukku ūṟi[ñca] pariyāti kaṭamai yiṟuttum pa-
19. la tēvatāṉam tiruvuṭaiyāṭṭappaṟṟukku iṟuppaṉa iṟuttum peṟuvaṉa peṟṟum aṉupavittu potuvārākavum
20.[i]vai... [ṭi] immariyāti aṉupavittu nām eḻutikkuṭutta aṭimaiyāra tē..[vi]yum ivaḷ makaḷ cirāḷum ivaḷ tampi makkaṇāyaṉu-
21. m ivaḷuṭaiya ciṟiyatāy āvuṭaiyāḷum ivaḷ tampi cirāratē[va]ṉum ivaṉ marumakaḷ cirāḷum periyaṉācci makaṉ tirumeyyama-
22. laiyāḷaṉum [civa]ttamakkaṇāyaṉum ākappēr eṭṭum paḷḷaṭiyāril vaḷat[ti] makaḷ maṉṟiyum ivaḷ makaḷ poṉṉiyum koḷ-
23. ḷi makaḷ toḻu[ti]yum uṭappi makaṉ poṉṉaṉum viḷatti makaṉ villiyum āka ivvakaippaṭi uḷḷa aṭimaiyum kāṇiyāṭci-
24. yum maṉaiyumaṟṟum eppēṟpaṭṭa camutta prāttikaḷum taraṉātaṉa kaṅkaḷukkurittāvatāka cantirātittavaṟ cella aṉupavikku-
25. mpaṭi kallilum cempilum veṭṭikkuṭuttēṉ cirāḷatēvarkku muṉaiyataraiyaṉ makka.. yaṉā ..ippaṭikku ivai
26. melūr cirāḷatēvaṉ muṉaiyataraiyaṉ makkaṇāyaṉār eḻuttu ivai muṉaiyataraiyaṉ eḻuttu i[vai]…. ṉa[ṉā]….
27. rāṉa vallanāṭṭu vēḷāṇ eḻuttu ippaṭikku kōṭṭaiyūr ulakaḷantacōḻakkāṉaṉāṭṭu vēḷār eḻuttu ippaṭikku
28. ceṅkuṉṟanāṭṭu vēḷār eḻuttu ivai vāṇātarāyar eḻuttu ivai kaṇṇaṉur cuntara... kāliṅkarāyar e-
29. ḻuttu ippaṭikku terkkaṭṭur vāṇātarāyar eḻuttu ippaṭikku ivai aḻakiya tirucciṟṟampalamu-
30. ṭaiyār āṉaiyār eḻuttu ivarkaḷ colla inta pramāṇam eḻutiṉēṉ melūr ūrkkaṇakku ulakala-
31. ṅkāra muvēntira vēḷāṉ eḻuttu - Took Place At
-
Sathyamoorthy Temple
On the outer upper wall of the Sundarapandiyan Koradu mandapam in Sathiyamoorthy Temple
Thirumayam - Spatial Coverage
- 10.2469,78.7494
- Has Governamental Administrative Area
-
Sathyamoorthy Temple
Pudukkottai - Has Time-span
-
12
கும்[ஹ]நாயற்று அபரபக்ஷத்து துவாதேசியும் நாயாற்றுக்கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் - Had General Purpose
-
விருதராசபயங்கரவளநாட்டு மேலூர் சிராளதேவன் முனையதரையனின் மகன் சிராளதேவர்க்கு காணி, மனை, அடிமகளை பரிசாகக் கொடுத்த செய்தி உள்ளது.
மேலும் இக்கல்வெட்டில் பரிசாகக் கொடுத்த காணி, மனை அடிமையின் தரத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
மேலூர் குளத்தின் வாயிலாக நீர்பாய்ந்து விளையும் நிலத்தில் பெரிய திருவிடையாட்ட நிலத்தில் பன்னிரடிக்கோலால் மூன்று மா நீக்கிப் பதினேழு மா நிலத்தையும், மேலூர் நடுத்தெருவில் மனையும் வீட்டின் பின்புறம் உள்ள மனையில் பங்கு மனையும், அடிமைகளாகத் தேவியின் மகள், மகன் (சிரான், மக்கணாயன்) இவர்களின் சிறியதாய் ஆவுடையாள் மற்றும் பிற உறவினர்களையும் வேறுசில அடிமைகளாகப் பள்ளாடியர்வளத்தி மகள் மன்றி, மன்றியின் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளந்தி மகன் வில்லி ஆகிய அடிமைகளையும் கொடுத்துள்ளன. - Dynasty
- Pandya
- Name
- Sri Parakrama Pandiyadeva
- Familyname
- கோச்சடை பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
- Has Type
- Home Slavery
- Type
-
Gift
Inheritance - Transferred Title From
- சிராளதேவன் முனையதரையன்
- Transferred Title To
- சிராளதேவன்
- Transferred Title Of
- மன்றி, பொன்னி, தொழுதி, பொன்னன், வில்லி
- Transferred Custody Of
- காணி, மனை
Cite this Item
"Inscription of the Pudukkottai State_459."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/IPS_459
Position: 872 (9 views)