Annul Reports on Indian Epigraphy_B_278_1977-78
Item Details
- Identifier
- ARE_B_278_1977-78
- Bibliographic Citation
- Annul Reports on Indian Epigraphy_B_278_1977-78
- Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Grantha
Tamil - Description (plain Text)
-
1. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ மநுமகாமண்டலேஸ்வர ஹரிஹராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு குடாதான் பூர்வதட்சிண பச்சிம உத்திர சமுத்திராதிபதி கசவேட்டை கண்டருளிய மல்லிகார்ச்சுன மஹாராயர் பிரித்திராஜ்யம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகாராநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோணத்து நாள் ஜெயங்கொண்ட-
2. சோழமண்டலத்து பளுஊற் கோட்டத்து கரைவழி ஐம்புழு நாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலி நாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரிய ராகு தனும் இவன் தம்பி சங்கேதி இராகுதனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும் கும்மனும் பெரிய இராகுதன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறி வெங்காத்தாலையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சு பேரையும் இவள் மகன்
3. கொழுந்தனையும் ஆக எங்கள் பதின்முன்று பேரையும் கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்குறி இம்மொழிக்கெட்டு எதிர்மொழி கொடுத்தொன் அகரம் பெருமாள் ஆனை காத்த அப்பன் ஸ்ரீ காரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர் நாயக்கன் முற்கூறியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் எழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்முன்று பேரையும் விலைக் குறத்தரில் ஆனைகாத்த அப்பன் அருளிச்செயல்படிக்கு விலை தந்து கொள்வெ-
4. ன் என்று பிற்கூறி முற்கூறிய இராக்குதன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமய குமாரர் வன்னியத் திம்மிய நாயக்கரும் இந்த பதின்முன்று பேற்கும் எம்மில் இசைந்த விளைபொருள் வாசிப்படா நற் இப்பணம்...இரண்டாயிரத்து முன்னுற்று என்பதுமே எங்கள் பதின்முன்று பேருக்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழு பேரும் பிள்ளைகள் மூவரும் ஆக பதின்முன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னுற்று என்பதும் சமையகுமாரர் வன்னியத் திம்மி நாயக்கர் பண்டாரத்திலே பற்றி கொ-
5. ண்டு எங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக் கொடுத்தமை-
6. க்கு நாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கும் திருக்கைக்கோளற்கு உண்டான அடிமைத்-
7. தொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிப்பாட எம்பெருமான் அடியாற்கு உண்டா அடிமைத் தொழில்களுக்கும்
8. உரித்தாகக் கடைவோ ம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு-
9. எங்கள் வழி வழி பரிபாலனம் உள்ளது ஆண் பிள்ளை உள்ளது சிபாதம் தாங்கவும் திருமேனி காவலுக்கு உரித்து ஆகவும் பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும் இ-
10. ப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக்குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் ஸ்ரீகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்மி நாயகக்ற்கு சோழகோன் தித்தமுடையார் மகன் இராகுதனும்
11. சிறு இராகுதனும் நல்லானும் கையும் உள்ளிட்ட பதின்முன்று பேரும் ஓம் பெரிய இராகுதன் சிறு இராகுதன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து இந்த சாதனமு தொண்டைமண்டலம் பிரமராயர்
12. ஆனை காத்த பெருமாள் அருளிச்செயல்படுக்கு பட்டர் வாரியன் அப்பிளை இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம் பாண்டை வெட்டினான்
13. இந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பெர் வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக் கூத்தர் தொறா பள்ளிகொண்ட பெருமாள் கோயில் தானத்தார் இப்படி அறிவேன் பட்டாசரியர் ஆனை இப்படி அறிவேன் கெசவபட்டர் இப்படி அறிவேன் தேசப்பட்டர் இப்படி அறிவேன் வாதுளபட்டர்
14. கிழைவி தொண்டைமானார் செதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமைய முதலியார் பெரிய நாட்டு நம்பியார்....மாதவராமர் - Transcription
-
1. cupamastu svastiśrī manumakāmaṇṭalēsvara hariharāya vipāṭaṉ pāṣaikkut tappuvarāyar kaṇṭaṉ mūvarāyar kaṇṭaṉ kaṇṭa nāṭu koṇṭu koṇṭanāṭu kuṭātāṉ pūrvataṭciṇa paccima uttira camuttirātipati kacavēṭṭai kaṇṭaruḷiya mallikārccuṉa mahārāyar pirittirājyam paṇṇi aruḷā niṉṟa cakāptam 1391 l mēl cellā niṉṟa virōti varuṣam makārānāyaṟṟu pūrva pakṣattu pañcamiyum caṉivāramum peṟṟa tiruvōṇattu nāḷ jeyaṅkoṇṭa-
2. cōḻamaṇṭalattu paḷuūṟ kōṭṭattu karaivaḻi aimpuḻu nāṭṭu āḻmai ūrilum vantu pāli nāṭṭu akarattilirukkum kaikkōḷaril cōḻakōṉ tīttamuṭaiyāṉ makaṉ periya rāku taṉum ivaṉ tampi caṅkēti irākutaṉum nallāṉum nāṅkaḷ mūvarum eṅkaḷ taṅkai kaṅkaiyum ivaḷ makaḷ tirumalaicciyum vīraṉum kummaṉum periya irākutaṉ makaḷ periya veṅkāttāḷaiyum ciṟi veṅkāttālaiyum mutaliyaiyum ilakkumaṉaiyum cāntiyum peṇkaḷ añcu pēraiyum ivaḷ makaṉ
3. koḻuntaṉaiyum āka eṅkaḷ patiṉmuṉṟu pēraiyum kottu aṭimai āka emperumāṉ tirukkōyilukkuk koḷvāruḷarō eṉṟu muṟkuṟi immoḻikkeṭṭu etirmoḻi koṭuttoṉ akaram perumāḷ āṉai kātta appaṉ śrī kāriyam pāṟkum vaṉṉiya timmaya nāyakkar nāyakkaṉ muṟkūṟiyapaṭi uṅkaḷ mūvaraiyum uṅkaḷ peṇkaḷ eḻupēraiyum piḷḷaikaḷ mūvaraiyum āka patiṉmuṉṟu pēraiyum vilaik kuṟattaril āṉaikātta appaṉ aruḷicceyalpaṭikku vilai tantu koḷve-
4. ṉ eṉṟu piṟkūṟi muṟkūṟiya irākkutaṉ uḷḷiṭṭārum piṟkūṟiya camaya kumārar vaṉṉiyat timmiya nāyakkarum inta patiṉmuṉṟu pēṟkum emmil icainta viḷaiporuḷ vācippaṭā naṟ ippaṇam...iraṇṭāyirattu muṉṉuṟṟu eṉpatumē eṅkaḷ patiṉmuṉṟu pērukkum vilai āvatu ākavum nāṅkaḷ mūvarum eṅkaḷ peṇkaḷ ēḻu pērum piḷḷaikaḷ mūvarum āka patiṉmuṉṟu pēṟkum vilaippaṭi paṇam iraṇṭāyirattu muṉṉuṟṟu eṉpatum camaiyakumārar vaṉṉiyat timmi nāyakkar paṇṭārattilē paṟṟi ko-
5. ṇṭu eṅkaḷai nāṅkaḷē āṉaikātta appaṉ tirukkōyilukku kottu aṭimai āka vilaipiramāṇam paṇṇik koṭuttamai-
6. kku nāṅkaḷ mūvarum piḷḷaikaḷ mūvarum cipātam tāṅkavum tirumēṉikāvalukkum tirukkaikkōḷaṟku uṇṭāṉa aṭimait-
7. toḻilukkum eṅkaḷ peṇkaḷ ēḻupērum āṭippāṭa emperumāṉ aṭiyāṟku uṇṭā aṭimait toḻilkaḷukkum
8. urittākak kaṭaivō m ākavum kottaṭimai āka āṉaikātta appaṉ tirukkōyilukku piramāṇam paṇṇikkuṭuttamaikku-
9. eṅkaḷ vaḻi vaḻi paripālaṉam uḷḷatu āṇ piḷḷai uḷḷatu cipātam tāṅkavum tirumēṉi kāvalukku urittu ākavum peṇ uḷḷatu emperumāṉ aṭimaikkum urittākak kaṭavarākavum i-
10. ppaṭi cammatittu piramāṇam paṇṇikkuṭuttōm āṉaikātta appaṉ tirukkōyil śrīkāriyam pāṟkum camaiyakumārar vaṉṉiyat timmi nāyakakṟku cōḻakōṉ tittamuṭaiyār makaṉ irākutaṉum
11. ciṟu irākutaṉum nallāṉum kaiyum uḷḷiṭṭa patiṉmuṉṟu pērum ōm periya irākutaṉ ciṟu irākutaṉ keṅkai uḷḷiṭṭār eḻuttu inta cātaṉamu toṇṭaimaṇṭalam piramarāyar
12. āṉai kātta perumāḷ aruḷicceyalpaṭukku paṭṭar vāriyaṉ appiḷai inta eḻuttu ellām eḻutiṉāṉ intak kalveṭṭu viraṟku miṇṭa ācāri nam pāṇṭai veṭṭiṉāṉ
13. inta cātaṉaṅkaḷukku aṟivukku eḻuttiṭṭa per vaṉṉiya nāṭṭu nāyakañ ceyvār cantiranāyaṉār mēṟpaṭi mārik kūttar toṟā paḷḷikoṇṭa perumāḷ kōyil tāṉattār ippaṭi aṟivēṉ paṭṭācariyar āṉai ippaṭi aṟivēṉ kecavapaṭṭar ippaṭi aṟivēṉ tēcappaṭṭar ippaṭi aṟivēṉ vātuḷapaṭṭar
14. kiḻaivi toṇṭaimāṉār cetirāyar kāvaṉūr teṉṉavarāyar iriñcipuram camaiya mutaliyār periya nāṭṭu nampiyār....mātavarāmar - Took Place At
-
Varadaraja perumal Temple
North and west walls of the ardhamandapa of the central shrine in first tier
Agaram - Spatial Coverage
- 12.9113178,79.3290118
- Has Governamental Administrative Area
-
Agaram
North Arcot - Date Created
- 1469
- Uses Calendar
- Saka Era
- Has Time-span
- Saka 1391, விரோதி வருஷம் மகாராநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோணத்து நாள் (1469 CE)
- Had General Purpose
-
ஆணைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு ஆண்கள் மூன்று பேரையும் பெண்கள் ஏழு பேரையும் குழந்தைகள் மூன்று பேரையும் ஆக 13 பேரையும் 2380 காசுக்கு கொத்தடிமைகளாகக் போனச் செய்தி உள்ளது.
மேலும் இக்கல்வெட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களின் வேலைகளை குறிப்பிடுகிறார்கள்.
ஸ்ரீபாதம் தாங்கவும் திருமேனி காவல் புரியவும் மற்றும் திருக்கைகோளருக்கு உண்டான அடிமை தொழில் புரிவதும் ஆண் அடிமைகளின் வேலையாக உள்ளது.
ஆடிப்பாடவும் மற்றும் அடிமைத்தொழில் புரிவதும் பெண் அடிமைகளின் வேலையாக உள்ளது. - Dynasty
- Vijayanagara
- Name
- மல்லிகார்ச்சுன மஹாராயர்
- Familyname
- பூர்வதட்சிண பச்சிம உத்திர சமுத்திராதிபதி கசவேட்டை கண்டருளிய
- Has Type
- Group Slavery
- Type
- Self-Sale
- Transferred Title From
- Self
- Transferred Title To
- ஆணைகாத்த அப்பன் திருக்கோயில்
- Has Value
- 2380
- Transferred Title Of
- பெரிய ராகுதன், சங்கேதி இராகுதன், நல்லான், கங்கை, திருமலைச்சி, வீரன், கும்மன், பெரிய வெங்காத்தாள், சிறி வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி, கொழுந்தன்
- Had Specific Purpose
-
ஸ்ரீபாதம் தாங்கவும் திருமேனி காவல் புரியவும் மற்றும் திருக்கைகோளருக்கு உண்டான அடிமை தொழில் புரிவதும் ஆண் அடிமைகளின் வேலை
ஆடிப்பாடவும் மற்றும் அடிமைத்தொழில் புரிவதும் பெண் அடிமைகளின் வேலை
Cite this Item
"Annul Reports on Indian Epigraphy_B_278_1977-78."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/ARE_B_278_1977-78
Position: 1644 (1 views)